Random image

எல்லைதாண்டி மீன்பிடிப்பு: 18 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான் கடற்படை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான்  கடலோரக் காவல் படையினர் மீனவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரபிக்கடலில் மீன்பிடித்து வரும் இந்திய மீனவர்கள், பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி  18 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்த 2 படகுகளையும்  பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் பிடித்துள்ளனர். அவர்களை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.