சண்டிகர்: ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் ச‍ேர்ந்த ஹால்ஸ்டீன் ஃப்ரீஸியன் வகையைச் சேர்ந்த ஜோகன் என்ற கலப்பின பசு, 24 மணிநேரத்தில் 76.61 கி.கி. பால் கறந்து சாதனைப் படைத்துள்ளது.

கலப்பின பசு ஒன்று கறந்த அதிகபட்ச பால் அளவு இதுதான் என்று தேசிய பால்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், இத்தகைய கலப்பின பசு ஒன்று, பஞ்சாப் மாநிலத்தில் ஒருநாளில் 72 கி.கி. அளவு பால் கறந்ததே அதிகபட்ச சாதனை அளவாக இருந்தது. கர்னாலைப் பொறுத்தவரை, இதற்கு முந்தைய அதிகபட்ச அளவு 65 கி.கி.

தற்போதைய சாதனையை செய்துள்ள பசுவானது, பேன்னிமேக்கர் ஏபிஎஸ் யூஎஸ்ஏ இறக்குமதி விந்துவின் மூலம் பிறந்தது என்று அதன் உரிமையாளர் பல்தேவ் சிங் கூறுகிறார்.

அவர் தற்போது வளர்த்துவரும் பசுக்களிலேயே இதுதான் சிறந்த பசு என்றும், பால் கறத்தலில் இந்தப் பசு பல விருதுகளை வென்றுள்ளது என்றும் பெருமையுடன் கூறுகிறார். இந்தப் பசு 4 வயதாக இருந்தபோது, ஒருநாளில் 42 கி.கி. அளவிற்கு பால் கறந்ததாகவும் அவர் நினைவுகூர்கிறார்.