சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர்பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிக்ழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கடற்கரையில் குவிந்தனர்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் எம்ஜிஆருக்குப்பின் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. 1989 முதல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அதன் பின்னர் 1991-ல் தமிழக முதலமைச்சராகபின்னர் 2001, 2011, 2016 என மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா 2016-ம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை சரியாக 11-00 மணிக்கு முதலமைச்சர்பழனிசாமி, துணை முதலமைச்சர்ஓபிஎஸ், சபாநாயகர் தனபாலுடன் திறப்பு விழா நடக்கும் இடத்துக்கு வந்தார். பின்னர் ரிப்பனை கத்தரித்து நினைவிடத்தை திறந்து வைத்தார். அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் உடனிருந்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தை காண ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் வாலாஜா சாலையில் குவிந்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.