கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையால்-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி பேர் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

காலை- மாலை ‘வாக்கிங்’ குகளை தவிர்த்தனர். ராத்திரி நேர கூத்துக்களையும் நிறுத்தினர்.
இதனால், பிக் பாக்கெட் பேர் வழிகள், ஜெயின் பறிப்போர், மொபைல் போன் திருடர்களின் ‘தொழிலும்’ முற்றிலுமாக நலிந்து போனது.

சென்னையில் 130 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன.
வழக்கமாக தினமும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் குறைந்த பட்சம், இரண்டு –மூன்று வழிப்பறி மற்றும் மொபைல் திருட்டு புகார்கள் வருவதுண்டு.

மக்கள் ஊரடங்கு காலத்தில் மருந்துக்கூட மேற்சொன்ன எந்த ஒரு புகாரும் காவல்நிலையங்களில் பதிவாக வில்லை.

நேற்றும் கூட அதே நிலைதான்.
இன்று மாலை முதல் மாநிலம் தழுவிய ஊரடங்கு போடப்பட்டுள்ளதால்-
மாநிலம் முழுக்க குற்றங்கள் குறையும் என்று காவல்துறை நம்புகிறது.