Random image

சிஆர்பிஎப் வீரர்களின் மன அழுத்தம், தற்கொலையை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்

டில்லி:

சிஆர்பிஎப் வீரர்களின் மன அழுத்தம், தற்கொலையை தடுக்க சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் போர் மூலம் உயிரிழப்பவர்களை விட மன அழுத்தம், தற்கொலை காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான சிஆர்பிஎப் இதற்கென்று ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது. வீரர்களின் மன ஆரோக்கியத்திற்காக இந்த திட்டம் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது என்று அதன் இயக்குனர் ஜெனரல் பாட்நகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரு லட்சம் வீரர்கள் என்ற எண்ணக்கை அடிப்படையில் பார்த்தால் இது குறைந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களின் வயது வரம்பை நாட்டின் சராசரி தற்கொலை வயதினரோடு ஒப்பிடுகையில் ஒத்துப் போகிறது.

எனினும் தற்கொலை பிரச்னை மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மன அழுத்தத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ள சில பரிசோதனைகளும், கேள்விகளும் வீரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. மன அழுத்த சோதனை தொடர்பான வெள்ளோட்ட திட்டத்தின் ஒரு அங்கமாக இது மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

சிஆர்பிஎப்.ல் 3 லட்சம் வீரர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் சிறப்பான பணியை உறுதி செய்யும் வகையிலும், வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையிலும் எய்ம்ஸ் மற்றும் டாடா சமூக அறிவியல் மையத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

156 வீரர்கள் மாரடைப்பாலும், 38 பேர் மன அழுத்தம் மற்றும் தற்கொலையாலும், இதர காரணங்களால் 435 பேரும் தற்கொலை செய்துகொடுள்ளனர். இதே 2016ம் ஆண்டில் 92 பேர் மாரடைப்பிலும், 26 பேர் மன அழுத்தம் மற்றும் தற்கொலையாலும், 353 இதர காரணங்களாலும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.