கச்சா எண்ணை விவகாரம்: மோடியின் ஆலோசனையை நிராகரித்த சவூதிஅரேபியா

டில்லி:

ச்சா எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பாக பிரதமர் மோடி கூறிய ஆலோசனை மற்றும் வேண்டுகோளை சவூதி அரேபியா நிராகரித்து உள்ளது.

கச்சா எண்ணை விலையை குறைக்கும் வகையில், டாலருக்கு பதிலாக இந்திய கரன்சியில்  பரிவர்த்தனை செய்வது உள்பட சில கோரிக்கைகளை பிரதமர் மோடி சவூதி போன்ற கச்சா எண்ணை சப்ளை செய்யும் நாடுகளுக்கு வேண்டுகோளாக விடுத்தார். ஆனால், பிரதமர் மோடி  வேண்டுகோளை சவுதி அரேபியா  நிராகரித்து உள்ளது.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் நிதிப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது. இந்த ஈடு செய்யும் வகையில், நேற்று நடைபெற்ற சர்வதேச எண்ணெய் உற் பத்தி செய்யும் நிறுவன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றும்போது,  கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்வதில் டாலர் மட்டுமே அளிக்க வேண்டுமா, அதற்குப் பதில் ரூபாய் கரன்சியை பயன்படுத்தலாமா, அதை  எந்தெந்த நிறுவனங்கள் ஏற்கும் வாய்ப்புள்ளது என்பதை ஆராய வேண்டும என்று கூறினார்.

மேலும் பிற நாடுகளிலிருந்தும் கச்சா எண்ணை  இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டும் என்றும், கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் விஷயத்தில் ஏற்றுமதி நாடுகள் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதன் காரணமாக, உலக அளவில் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது’’ என  கூறினார்.

இந்தக் கூட்டத்தில் சவூதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து பேசிய  சவுதி அமைச்சர் காலித்,  ‘‘கச்சா எண்ணெய் சப்ளை மட்டுமே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு தேவையான உதவிகளை இந்தியாவுக்கு செய்ய தயாராக உள்ளோம்.  ஆனால் விலை குறைப்பு என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு எங்களால் உதவ முடியாது’’ எனக் கூறினார்.

மோடியின் வேண்டுகோளை உடனே நிராகரித்து சவூதி அமைச்சர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.