டெல்லி:

ச்சா எண்ணை விலை வரலாறு காணாத அளவு சரிந்து வரும் நிலையில்,  மோடி தாலைமையிலான மத்திய அரசோ கலால்வரியை உயர்த்தி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணை விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மத்தியஅரசோ,  பெட்ரோல் டீசல் மீது வசூலிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் அதன் பயனை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது  நுகர்வோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போதுமீண்டும் உயரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.