ஜெய்ப்பூர்:

பிஎல் கிரிக்கெட் தொடரின்  25-வது லீக் ஆட்டம் ராஜஸ்தானில் உள்ள சுவாமி மான்சிங் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நேற்று இரவு  போட்டி நடைபெற்றது.

இதில்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்ன சூப்பர் கிங்ஸ் அணி திரில்  வெற்றி பெற்றது.  நேற்றைய வெற்றி காரணமாக, இதுவரை நடை பெற்று வந்து ஐபிஎல் போட்டிகளில்  தோனி கலந்துகொண்ட ஆட்டத்தின்போது  கிடைத்த 100வது வெற்றி.

இந்த நிலையில் ஆட்டத்தின்போது, நோபால் வீசியதாக ஒரு அம்பயர் கூற, மற்றொருவர் இல்லை என கூற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது கேப்டன் தோனி, அது நோ பால் என்று அம்பர்களிடம் வாக்குவாதம் செய்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக, சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக தோனிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் பந்துவீசிய போது நோபால் வீசியதாக சர்ச்சை எழுந்தது. கடைசி ஓவரின் நான்காவது பந்தை கள நடுவர் நோ பால் என சைகையால் தெரிவித்தார். ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் அல்ல என மறுத்தார்.

இதனால் நோ பால் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனால் கோபமடைந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். நோ பால் என அறிவித்தபிறகும் அதைத் திரும்பப் பெற்றது ஏன் என வாக்குவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாதால் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

இக்காட்சி  தொலைக்காட்சியிலும், மைதானத்தில் நேரிலும் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த னர். பொதுவாக கூலாக இருக்கும் தோனி, தற்போது நிதானமிழந்து வாக்குவாதம் செய்தது விமர்சனத்துக்குள்ளானது.

ந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக தோனிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.