சிஎஸ்கே-ஆர்ஆர்: ஞாயிறன்று நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டிக்கெட் விற்பனை படு ஜோர்….

சென்னை:

ரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை காண டிக்கெட்டுகளை வாங்க நேற்று இரவு முதலே கிரிக்கெட் ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.   விடிய விடிய காத்திருந்து டிக்கெட்டுகளை  வாங்கிச் செல்கின்றனர்.

வரும் 31-ம் தேதி ஞாயிறன்று இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுமா? அல்லது ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடையுமா என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் விவாதங்கள் நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கேப்டனாக இருக்கிறார். அதுபோல அதிரடி ஆட்டக்காரரான  கிறிஸ்ட் கெய்லும் இருக்கும் நிலையில் போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவி  வருகிறது.

இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை துவங்கியது.  குறைந்த பட்ச டிக்கெட் விலை, 1300, 2500, 5000 மற்றும், 6,500 ஆகிய  கட்டணங்களில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவற்றை வாங்க நேற்று இரவு முதலே கிரிக்க்ட ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவியத் தொடங்கினர். பலர் விடிய விடிய  அங்கேயே தங்கியிருந்து இன்று காலை டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.

. வழக்கமாக ஆயிரத்து 300 ரூபாய் டிக்கெட்டுக்கு 5 கவுன்டர்களும், 2 ஆயிரத்து 500 ரூபாய் டிக்கெட்களுக்கு 2 கவுன்டர்களும் திறக்கப்படும் நிலையில் இன்று தலா ஒரு கவுன்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர்.