சிஎஸ்ஆர் நிதி புகார்: மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கப்படும்! கிரண்பேடி

புதுச்சேரி:

சிஎஸ்ஆர் நிதி வசூல் புகார் குறித்து, மாநில முதல்வர்  நாராயணசாமி  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் கடிதம் எழுதலாம். இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறி உள்ளார்.

முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பெருநிறுவன சமூக பொறுப்பு என்ற [Corporate social responsibility (CSR)] , என்ற தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தில் பணம் வசூலிக்கப்பட்டு, முறைகேடாக பயன்படுத்து வருவதாகவும, இதில்  ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிவோர், தொழில் நிறுவனங்களிடம் சி.எஸ்.ஆர். நிதியை தன்னிச்சையாக வசூலித்து, சொந்த நலனுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.  சுமார் ரூபாய் 85 லட்சம் வரை ஆளுநர் கிரண் பேடி வசூலித்து அரசாங்கத்திற்கு கணக்கு காண்பிக்க வில்லை என்றும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, இதுகுறித்து,  நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு  கடிதம் எழுதிய பின் மத்திய உள்துறை அமைச்சகம் என்னிடம் கேள்வி எழுப்பினால், அதற்கு  பதில் அளிக்கப்படும் என்றார்.

இதுவரை யாரிடமும் பணமும் பொருள்களும் பெறப்படவில்லை ஒருவருடைய நிதியினால் தன்னார்வ பணியை மேற்கொள்ளும் போது பாராட்டப்பட வேண்டும். புதுச்சேரி மாநிலம்,  நீர் நிறை மாநிலமாக இருப்பது முதல்வர் நாராயணசாமிக்கு நல்லதுதானே என்று கூறினார்.

முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை பற்றி பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

You may have missed