பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்

 

மும்பை:

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி காலமானார். அவருக்கு வயது 54.

தமிழத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன ஸ்ரீதவி, பிறகு பின்பு இந்தி திரையுலகிலும் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்வு  ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.  மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடன் இருந்தனர். இவரது மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார். அவர் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்றவை மிகவும் பிரபலமானவை.

திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில வருடங்களுக்கு முன் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற இந்திப் படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.

பத்மஸ்ரீ, ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றார்.