‘ஊரடங்கு காலகட்டத்தில் முழுக்க முழுக்க செல்போனில் படமாக்கப்பட்டது ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘சி யு சூன்’.

மகேஷ் நாராயண் இயக்கியுள்ள இப்படத்தில் ரோஷன் மேத்யூஸ், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தை ஃபஹத் பாசிலே தயாரிக்கவும் செய்துள்ளார்.

‘சி யு சூன்’ கணினி திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர் திரைப்படம்.

இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.