கொரோனா தொற்றுக்கு கியூபாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

வானா

லகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றைக் குணமாக்கும் மருந்தைக் கியூபா நாடு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு தீர்வு காண முடியாத நிலை இருந்து வருகிறது.   இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குப் பல மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.   குறிப்பாக இந்தியாவில் ஒரு மூத்த இத்தாலி தம்பதியினருக்கு எச் ஐ வி மருந்துக் கலவை அளித்துக் குணமானதால் அந்த மருந்தைப் பலருக்குச் சிபாரிசு செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கியூபா நாட்டில் ஆல்ஃபா 2பி எனப்படும் மருந்து கொரோனா பாதிப்பு உண்டான ஆயிரக்கணக்கானோரை குணப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.   இந்த அல்ஃபா 2பி மருந்து கியூபாவில் கண்டுபிடிக்கப்பட்டு சீனாவில் உருவாக்கப்படுகிறது.  இது சீனா மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாகும்.

சீனாவில் கொரோனாவை குணப்படுத்த பயனடுத்திய 30 மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.  இந்த மருந்தைச் சீனர்களுக்குப் பயன்படுத்தி குணம் பெற்றுள்ளனர்.   இந்த மருந்து எச் ஐ வி,  ஹெபாடிடிஸ் பி மற்றும் சி, டெங்கு, ஒரு சில வகை புற்றுநோய் போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.   இந்த மருந்தை தென் கொரியாவில் 8000 பேருக்கு அளித்ததில் அதில் 72 பேர் மரணம் அடைந்து மீதமுள்ளோர் முழு நலம் பெற்றுள்ளனர்.

தற்போது கியூபாவில் உள்ள இந்த மருந்து தயாரிக்கும் பயோ கியூபல் அர்மா நிறுவனத்துக்குப் பல நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன   லத்தின் அமெரிக்கா, கரிபியன், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் இந்த மருந்தை அனுப்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டுள்ளன.  இதனால் இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான பயோ கியூபல் அர்மா நிறுவனத் தலைவர்  மருந்து உற்பத்தியை பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கியூபா நாட்டின் மருத்துவர்களைக் கடுமையாகத் தாக்கி பேசி வருகிறார்.  அத்துடன் கியூபா நாட்டின் மீது அவர் ஏராளமான பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளார்.  அதையும் மீறி கியூபா மருந்து தயாரிப்பில் முன்னணியில் நிற்கிறது.