வானா

கொரோனா பாதிப்பு குறித்த கியூபாவின் பல நடவடிக்கைகளுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

கொரோனா அச்சத்தால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது.   கொரோனா அறிகுறியுடன் வரும் பயணிகளை நாட்டுக்குள் வர பல நாடுகள் தடை விதித்துள்ளன    ஒரு சில நாடுகளில் கொரோனா பாதித்த சொந்த நாட்டவரே வரக்கூடாது என தடை விதித்து வருகிறது.  இந்நிலையில் கியூபா ஒரு துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளது.

கரீபியன் கடலில் எம் எஸ் பிரீமர் என்னும் சொகுசுக் கப்பல் 682 பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் சென்றுக் கொண்டிருந்தது.  அதில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது தெரிய வந்ததால் அந்த கப்பலை நிறுத்த கரீபியன் நாடுகளிடம் கப்பல் நிறுவனம் அனுமதி கோரியது.   ஆனால் யாரும் அனுமதி அளிக்கவில்லை.

இதையொட்டி நடுக்கடலில் அம்போ எனக் கைவிடப்பட அந்தக் கப்பலுக்குக் கியூபா அரசு அனுமதி அளித்து பகமாஸ் துறைமுகத்துக்கு பிரீமர் கப்பல் கொண்டு செல்லப்பட்டது.   அங்கு அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா சோதனை நடந்தது.  பாதிப்பு இல்லாதவர்கள் கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் விமானம் மூலம் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர்.  கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்குக் கியூபா சிகிச்சை அளித்து வருகிறது.

உலகின் ஏழ்மை மிகுந்த நாடுகளில் ஒன்றான கியூபாவுக்கு உள்ள கருணை உள்ளம் மற்ற நாடுகளுக்கு இல்லாதது குறித்து அனைத்து நாடுகளும் வெட்கப்பட வேண்டும் என ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்   இவ்வேளையில் கியூபா எவ்வாறு இவ்வளவு துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நாம் காண வேண்டும்.

கடந்த 1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்டிரோ மற்றும் செகுவாரோ ஆகியோர் புரட்சியின் மூலம் கியூபாவில் நடந்த சுரண்டல் ஆட்சியை வீழ்த்தி புதிய அரசை அமைத்தனர்.   கியூபாவின் அதிபர் பொறுப்பு ஏற்ற பிடல் காஸ்டிரோ மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் பணியைத் தொடங்கினார்.   இதில் சேகுவேராவின் பங்கும் இருந்தது.

அதன்படி கியூபாவில் இருந்த மருத்துவர்கள் இரு பிரிவாக பிரிக்கபட்டுஒரு பிரிவினர் கியூபா நாட்டில் தங்கி சேவைசெய்யவும் மற்ற நாடுகளில் பேரிடம் நடைபெறும் போது மற்ற பிரிவினர் அங்குச் சென்று செயல்படவும் திட்டம்  தீட்டப்படது.  அத்துடன் இருவரும் மருந்துகளின் விலைக்குறைப்பு, இலவச மருத்துவ சேவை, மருத்துவக்கல்வி பரவலாக்கல் மூலம் நாட்டை மருத்துவ ரீதியாகப் பலப்படுத்தினர்.

தற்போது கொரோனா பரவுவதைத் தடுக்க கியூபா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் அங்கு 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இத்தாலி,  பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கியூபா மருத்துவர்களின் சேவையை அளிக்க அந்நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.  சில தினங்களுக்கு முன்பு பிரேசிலில் கியூபா மருத்துவர்கள் குறித்து கேலியும் கிண்டலும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கும் உதவ முன் வந்ததன் மூலம் ஆர்வலர்கள் தெரிவித்த படி கியூபாவின் நடவடிக்கை மற்ற உலக நாடுகளை வெட்கப்படச் செய்யும் வகையில் உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.