கடலூர்: சிறைவாசி மனைவிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற கணவன் கைது

கடலூர்

டலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மனைவிக்கு திருட்டுத்தனமாக கஞ்சா பொட்டலத்தை அளிக்க முயன்ற கணவரை காவல்துறை கைது செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு, கடலூர் மத்திய சிறை வளாகம் அருகே வந்த திலகவதியின் கணவர் சுதாகரன், உறவினர் தினகரன் ஆகியோர் கல்லில் கஞ்சா பொட்டலத்தை கட்டி, வெளியில் இருந்து சிறைச்சாலை உள்ளே வீசினர்.

இதைப் பார்த்த சிறைக் காவலர்கள், வெளியே சென்று சுதாகரனை கைது செய்தனர். சுதாகரனுடன் வந்த தினகரன் தப்பியோடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிறைவாசம் அனுபவிக்கும் மனைவிக்காக கணவன் கஞ்சா பொட்டலத்தை வீசி எறிந்த சம்பவம் கடலூர் சிறைவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.