அமெரிக்கா: குபெர்டினோ நகரின் முதன் பெண் மேயராக இந்திய பெண் தேர்வு!

நியூயார்க்:

மெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான குபெர்டினோ  நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரபலமான ஆப்பிள்  கம்யூட்டர் நிறுவனத்தின் தலைமையகம் இந்த நகரத்தில்தான் அமைந்துள்ளது.

இந்நகரில் வசித்து வருபவர் சவிதா வைத்தியநாதன். இந்தியப் பெண்ணான இவர், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

எம்.பி.ஏ. பட்டதாரியான சவிதா, கணித ஆசிரியையாக  இங்குள்ள பள்ளியில் பணியாற்றினார். பின்னர், தனியார் வங்கியில் பணியாற்றியதுடன் பல்வேறு சமூகச்சேவை களிலும் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக அந்த பகுதி மக்களின் அமோக ஆதரவை பெற்றவர்.

குபெர்டினோ நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவரது பதவி ஏற்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள அவரது தாயார் இந்தியாவில் இருந்து கலிபோர்னியா வந்தார்.  அவரது முன்னிலை யில் சவிதா மேயராக பதவி ஏற்றார்.

குபெர்டினோ நகரின் முதல் பெண் மேயராக பதவி ஏற்ற சவிதா கூறுகையில், “இந்நிகழ்ச்சி என் வாழ்வின் மிக முக்கியமான தருணம்”  என்று கூறினார்.

அவருக்கு அமெரிக்காவில் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி