ஊரடங்கு விலக்கலா? நாளை காலை 10மணிக்கு மோடி உரை…

டெல்லி:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு விலக்கப்படுமா? நீட்டிக்கப்படுமா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும், வழக்கமாக மோடி ரேடியோவில் பேசும் மான்கி பாத் நிகழ்ச்சி, இன்று உள்ள நிலையில், பிரதமர் இன்று அந்த நிகழ்ச்சியில் மோடி பேசவில்லை எனவும் பிரதமர்  அலுவலகம்  தெரிவித்து உள்ளது.

நாளை மக்களுடன் உரையாற்றும்போது,  ஊரடங்கு உத்தரவு பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.