ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 14ம் தேதி வரையில் அமலில் இருக்கும். அதன் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்தவித தகவல்களும் இல்லை.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்குள்ளான மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானா, ஊரடங்கை ஜூன் வரை நீட்டித்துள்ளது. அதற்கான அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஏப்.14-ல் நிறைவடைகிறது. அதனை மேலும் ஜூன் 3ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான சிறப்பாக உத்தி ஊரடங்கு தான். அதனால் தான் இந்த குறைந்தபட்ச பாதிப்பை கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த ஊரடங்கை நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருக்கிறார்.