அருணாசலப் பிரதேசத்தில் வன்முறை : ஊரடங்கு சட்டம் அமுல்

தாநகர்

ருணாசல பிரதேசத்தில் நடங்க கதவடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்த்தால் தலை நகர் இதாநகரில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது.

அருணாசல பிரதேச அரசு அந்த மாநிலத்தை சேராத 6 இனத்தவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க உள்ளதாக அறிவித்தது. இதற்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரு நாட்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது.

முழு அடைப்பின் இரண்டாம் நாளான நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடந்ததால் போராட்டக்காரர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் சட்டப்பேரவையை முற்றுகை இட ஊர்வலமாக வந்தனர். இதனால் பயந்து போன சட்டப்பேரவை உறுபினர்கள் பேரவை வளாகத்தின் உள்ளேயே தங்கி விட்டனர்.

போராட்டக்காரர்கள் சட்டப்பேரவையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். மற்றும் கடும் வன்முறையில் அவர்கள் ஈடுபட்டனர். அதை ஒட்டி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதில் போராட்டக்காரர்களில் ஒருவர் மரணம் அடைந்தார். மேலும் ஒருவர் அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகரில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் தவறான செய்திகள் பரவுவதையும் அதனால் வன்முறை ஏற்படுவதை தடுக்கவும் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அருணாசலப் பிரதேசத்தில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்துக் க்ள்ள வந்த பல பிரபலங்கள் இந்த கலவரத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த விழா வளாகத்திலும் போராட்டக்காரர்களால் வன்முறை வெடித்துள்ளது. அங்குள்ள பானர்கள், பரிசளிப்பு அரங்கம், தற்காலிக திரை அரங்கம்,. விழா மேடை, உணவு அரங்கம், ஆடியோ வீடியோ உபகரணங்கள் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி பிரபலங்கள் தங்கி இருந்த ஓட்டல்களிலும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  விழாவுக்கு வந்துள்ள பிரபலங்களுக்கு எந்த ஒரு அபாயமும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வந்துள்ள செய்தியின் படி மாநிலத்தில் இன்னும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. துணை முதல்வர் சவுனா மெயின் இல்லம் தாக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி அவருடைய வீட்டுக்கு ராணுவக் காவல் இடப்பட்டுள்ளது.