ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஷ்மீர் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி அதிகாலை 12 மணி முதல், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இங்கு மட்டுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அலுவலகங்கள் முன்னர் சொன்னது போலவே செயல்படாது. இக்காலத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. முக்கிய துறை அதிகாரிகள் வெளியில் பயணிக்க அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியானது போல மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.