இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

கொழும்பு

லங்கையில் இன்னும் பதற்றம் தணியாததால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில் 290 பேர் மரணம் அடைந்ததாகவும் மற்றும் 500 பேர் படுகாயம் அடைந்ததாகவும் இலங்கை காவல்துறை தெரிவித்தது.

நாடெங்கும் கடும் பதட்டம் நிலவியது.

நேற்று மாலை ஆறு மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊடட்ங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டது. இன்று காலை ஊரடங்கு உத்தரவு  விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால் இலங்கையில் பதற்றமான நிலை இன்னும் தொடர்ந்து வருகிறது.

அதை ஒட்டி இன்று பிற்பகல் முதல் மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.