புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு! நாராயணசாமி

புதுச்சேரி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தும்,இன்று இரவு முதல் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் நோக்கில், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் இன்றுமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.