சென்னை:
ரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யப்பட்ட தொகை இன்று  06/04/2020 காலை நிலவரப்படி ரூ.10 கோடியை நெருங்கி உள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை (06/04/2020)  நிலவரப்படி,  ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு உள்ளன.

விதிகளை மீறியதாக 4,45,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து , ரூ.9.98 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக   5,78,100 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.