சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 4,80,838 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது  ரூ. 13,60,16,335 அபராதம் வசூல்  செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ஊரடங்கை மீறியதாக 927 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று (19/06/2020)  காலை  நிலவரப்படி, 4,80,838 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 6,63,772 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

6,14,061 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாது.

சென்னை பெருநகரில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 927 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 144 தடையை மீறியதாக 2 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.