சென்னை:

மிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.9 கோடியை நெருக்கி உள்ளது. இதுவரை  5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.


கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு கடந்த 2 மாதங்களை கடந்து உள்ள நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோரை காவல்துறையினர் மடக்கி அபராதம் வசூலித்து வருகிற்னர்.
அதன்படி, ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24ந்தேதி முதல் (66 நாட்கள்)  இதுவரை விதிகளை மீறியதாக, 5லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைதுசெய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
4லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்களிடம் இருந்து அராபதமாக இதுவரை  8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வறு  தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.