தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ஒன்றரை லட்சம் வாகனங்கள் பறிமுதல்…

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோர் அதிகரித்து வந்த நிலையில், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 97ஆயிரத்து 536 பேர் கைது செய்யப்பட்டு, 1 லட்சத்து 56 ஆயிரத்து 314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், தலைநகர்  சென்னையில் மட்டும் 1லட்சத்து 12 பேர் வழக்குபதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

மேலும், ஊரடைங்கை மீறி தேவையின்றி,  வெளியில் சுற்றுவோர் மீது 269, 270, 188 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

.தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை  நீட்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், முகக்கவசம் இன்றி வெளியே வருவோர் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.