ஊரடங்கு மீறல்: 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் கைது, 3 கோடி 76 லட்சம் அபராதம் வசூல்

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டதாக 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 3 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரத்து 719 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கடந்த மார்ச் மாதம் 24–ந் தேதி முதல் இன்று (2–ந் தேதி) காலை 9 மணி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 509 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 66 ஆயிரத்து 430 வழக்குகள் பதிவாகியுள்ளன.

3 லட்சத்து 25 ஆயிரத்து 851 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 3 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரத்து 719 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று (1–ந் தேதி) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 236 இருசக்கர வாகனங்கள், 11 ஆட்டோக்கள் மற்றும் 4 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 251 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 517 இருக்கர வாகனங்கள், 19 ஆட்டோக்கள் மற்றும் 5 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 541 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.