ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராத வசூல் 11 கோடியை தாண்டியது

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிம் வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை  11 கோடியை தாண்டி உள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 10/06/2020 இன்று காலை 10 மணி நிலவரப்படி, இதுவரை 6.11 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை 4.59 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5.66 லட்சம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக அபராதம் வசூல்  ரூ.11.39 கோடி  ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.