நாட்டில் கலவரம் வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி:

ரூ.500, 1000 நடவடிக்கையை எதிர்த்து, நாட்டில்  கலவரம் வெடிக்கலாம் என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் எச்சிரித்துள்ளது.

நோட்டு தடையை எதிர்தது நாடு முழுதும் முழுவதும் கீழ்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடரப்படும் மனுக்களை தடைசெய்ய முடியாது என்று, மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம். உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

download-1

இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்திருந்த வழக்கு இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வின்முன்பு விசாரணை நடைபெற்றது.

அமர்வின் தொடக்கத்திலேயே நீதிபதி தாகூர், ‘மக்கள் பணத்தை தேடியலைகின்றனர். மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கு எதிராக அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படுவதே பிரச்னையின் தீவிரத்தையும் பரிமாணத்தையும் தெரியப்படுத்துவதாக இருக்கிறது.  மக்கள் நிவாரணம் தேடி நீதிமன்றங்களை நாடுகின்றனர். நாங்கள் அரசுக்காக, மக்களின் கதவுகளை அடைக்க முடியாது’ என்று, தெரிவித்தார்.

மேலும் ‘இந்தப் பிரச்னை; மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, இது மிகுந்த பரிசீலனைக்கு உரியது. மக்கள் பணத்துக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரங்களும் உருவாகலாம்’ என்று நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்தது.

இதை மறுத்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ‘இது முற்றிலும் தவறு. மக்கள் பொறுமையுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்’ என்று தெரிவித்தார். . இடைமறித்த உச்சநீதிமன்ற அமர்வு, ‘இல்லை! மக்கள் அல்லல் பட்டு நிற்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது’ என்று தெரிவித்தது.

மேலும், தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், அரசிடம் போதுமான பணம் இல்லையா என்ற தொனியில், ‘ரூ.100 நோட்டுகள் தட்டுப்பாடா? அந்த நோட்டுகள் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்படவில்லையே100 ரூபாய் நோட்டுகள் கிடைக்குமாறு செய்யப்படாதது ஏன்?’ என்று கேட்டார்.

இதற்கு முகுல் ரோத்தஹி  பதில் கூறும்போது, ‘ஆம்..100 ரூபாய் நோட்டுகள் ட்டுகள் போதுமான அளவில் இல்லை. , நவம்பர் 8 அறிவிப்புக்கு முன்பு ரூ.500, 1000 நோட்டுகளே மொத்த பணப் புழக்கத்தில் 80 சதவிகிதம் இருந்துவந்தன. ஆனால். பணத் தட்டுப்பாடு பிரச்சினை இல்லை. நாடு முழுவதும் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் புதிய நோட்டுகளைக் கொண்டுசேர்ப்பதில்தான் பிரச்னை’ என்றார்.

ஏற்கெனவே, “நோட்டு தடையால் நாட்டில் பணக்கலவரம் ஏற்படலாம். இந்த சூழலை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்”  என பொருளாதார நிபுரணர்கள் மத்திய அரசை எச்சரித்ததை கடந்த 13ம் தேதி   patrikai.com  இதழில் வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தி:

https://patrikai.com/india-monetary-riots-economic-experts-warn/