ரூபாய் பிரச்சினை: 5 முதல்வர்கள் கொண்ட ஆலோசனை குழு 7ந்தேதி கூடுகிறது!

டில்லி,

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ரூபாய் பிரச்சினை குறித்து ஆலோசனைகள் வழங்க 5 மாநில முதல்வர்க்ள் கொண்ட குழு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம் வரும் 7ந்தேதி கூடுகிறது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மக்கள் பணப்புழக்கம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

பணப்புழக்கம் குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள பண நெருக்கடி மற்றும் வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான 5 முதலமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழு வரும் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்து தொடர்பான சவால்கள் குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஏ.டி.எம். கூட்டம்
ஏ.டி.எம். கூட்டம்

வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் நேற்று முன் தினம் வரை வாரத்திற்கு ரூ.24,000 வரையும், ஏடிஎம்-மில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.2,500-ம் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, நாடு முழுவதும் நிலவி வரும் பணத் தட்டுப்பாடு பிரச்சனை வரும் ஜனவரி மாதத்திற்குள் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது,

ஒவ்வொருவரை கவலையில் ஆழ்த்தியுள்ள மிகப்பெரிய பிரச்சனை இது. இந்த பிரச்ச னையை தீர்ப்பதற்கு அனைவரும் ஒருங்கி ணைந்து சிந்திக்க வேண்டும். எதிர்பாராத வித மாக பாமர மக்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனை முடிவுக்கு கொண்டு வர கூட்டு முயற்சி தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.