தற்போதைய செய்திகள்

 • இமாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம்.
 • டெல்லி குர்காம் சாலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் கேலி செய்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 • ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கவுரவம் – தென்னிந்தியாவிற்கான ஐ.நா. பெண்கள் நல்லெண்ண தூதராக நியமனம்.
 •  இன்று அதிகாலை 4.30 மணியளவில் முசிறியில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. விபத்தில் சம்பவ இடத்திலேயே 1 பஸ் டிரைவர் பலி.11 பேர் காயம்.
 • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் புதிய விண்கலம்; நாளை காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது
 • ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் சென்னை வருகிறார்; ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
 • மேட்டூர் அணை நிலவரம். மேட்டூர் அணை நீர்மட்டம் : 70.57அடி. அணைக்கு நீர் வரத்து : 8,152கனஅடி.  அணை நீர்மின் நிலையம் வழியாக 1,250கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்யிருப்பு : 33.192டி.எம்.சி. அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அணைக்கு நீர் வரத்து 9,355 கனஅடியில் இருந்து 8,152கனஅடியாக குறைந்தது.
 • சென்னை மற்றும் அதன் வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
  உ.பி., பீகாரில் பயங்கர வெள்ளம்.. 8 லட்சம் பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 149-ஆக உயர்வு
 • அடுத்த மூன்று ஒலிம்பிக் தொடர்களுக்கான தயாரிப்புகளைத் திட்டமிட சிறப்புக்குழு அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
 • காஷ்மீரில் 50 நாளாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு. இன்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
 • டெல்லியில் நேற்று இரவு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, 2020, 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நடைபெற உள்ள மூன்று ஒலிம்பிக் தொடர்களுக்கான இந்தியாவின் தயாரிப்புகளைத் திட்டமிடுவதற்கான சிறப்புக்குழு அடுத்த சில நாட்களில் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 • டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் டிவிஎஸ் ‘வேணு ஸ்ரீநிவாசன்’..!
 • மின்சாரத்தை சேமிக்கும் இலக்கு டன், 2015 முதல், மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் திட்டத்தின் கீழ், 15 கோடி எல்.இ.டி., மின் பல்புகள் வழங்கப்பட்டு உள்ளன.  இதன் மூலம், 5.37 கோடி யூனிட் மின்சாரம் நாள்தோறும் சேமிக்கப்படுகிறது; தினந்தோறும், 21.49 கோடி ரூபாய் மிச்சமாகி வருகிறது
 • கோவை மாநகரில் அதிகப் புகையை வெளியேற்றியதாக 423 இருசக்கர, நான்குசக்கர வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 • நடிகர் விஜயகுமார் மகன் நடிகர் அருண்விஜய் ஓட்டிச் சென்ற ஆடி கார் போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அருண்விஜய் குடிபோதையில் கார் ஓட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அருண் விஜயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 • ஒலிம்பிக் போட்டிகளுக்காக செயல்திட்டம்: பிரதமர் மோடிக்கு தீபா கர்மாகர் நன்றி