விசாரணைக் கைதிகள் மரணம் : குஜராத்தில் மிகவும் அதிகமாக காவல்துறையினர் கைது

டில்லி

டந்த ஆண்டு விசாரணைக் கைதிகள் மரணம் தொடர்பாகக் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு விசாரணைக் கைதிகள் மரணம் குறித்து தேசிய குற்றவியல் பதிவுத்துறை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.   இந்த அறிக்கையில் 2019 ஆம் வருடம் நாடெங்கும் நடந்த விசாரணைக் கைதிகள் மரணம், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கடந்த வருடம் மொத்தம் 53 பேர் விசாரணையின் போது உயிர் இழந்துள்ளனர்.  இதில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 11 பேர் விசாரணையின் போது மரணம் அடைந்துள்ளனர்.  இரண்டாவதாகக் குஜராத் மாநிலத்தில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.   மரணம் அடைந்த 10 பேரில் 9 பேர் போலீஸ் காவலில் இல்லாமல் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் ஆவார்கள்.  இந்த 10 மரணங்களில் நான்கு தற்போது நீதி விசாரணையில் உள்ளது.  மேலும் 5 வழக்குகளில் நீதிபதி விசாரணை செய்துள்ளார்.

ஆனால் இந்த 10 மரணங்களில் மூன்றில் மட்டுமே குற்றவியல்  வழக்குகள் பதியபட்டுளன.  மேலும் இரண்டில் குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளன.  இதுவரை இந்த 3 குற்றவியல் வழக்குகளில் 14 காவல்துறை அதிகாரிஅக்ள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  இதுவரை யாருக்கும் தண்டனை அளிக்கப்படவில்லை

இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 காவல்துறை அதிகாரிகளும், குஜராத்தில் 210 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்  ஆ ஆனால் அதிகபட்சமாக காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது குஜராத் மாநிலத்தில் ஆகும்.   கைது செய்யப்பட்ட 210 அதிகாரிகளில் 196 பேர் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டு இரண்டு பேர் மீது நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்துள்ளது.

இந்த 10 மரணங்களுக்கும் குஜராத் காவல்துறை காரணங்கள் அனுப்பி உள்ளன. இதில் 3 மரணங்கள் தற்கொலை எனவும், 5 மரணங்கள் உடல்நிலை சரியில்லாததால் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.  ஒரு மரணம் விசாரணைக்காகப் பயணம் செய்யும் போது நடந்த விபத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள்ட்ய்ஹு ஒரே ஒரு மரணம் மட்டும் காவல்துறையினர் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் வருடம் காவலில் இருந்து 53 பேர் தப்பி உள்ளனர்.  இதற்காக 37 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கைதிகள் தப்புவதில் மகாராஷ்டிரா 102 என்னும் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.  குஜராத் 8ஆம் இடத்தில் உள்ளது.  தப்பி ஓடிய 53 பேர்களில் 43 பேர் கண்டுபிடித்து கைது  செய்யப்பட்டுள்ளனர்.  மீதமுள்ளோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.   இது தொடர்பாகக் கைது  செய்யப்பட்ட 37 அதிகாரிஅக்ள் மீது 13 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் 65 வயதான புலம்பெயர் தொழிலாளி பாபு நிசார் ஷேக் வழக்கு சேர்க்கப்படவில்லை.  தெலுங்கானாவைச் சேர்ந்த இவர் 2019 ஆம் வருடம் டிசம்பர் 10 ஆம் தேதி மரணம் அடைந்துள்ளார்.  இந்த மரணம் தொடர்பாக ஒரு ஆய்வாளர், ஒரு துணை ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  இவர்கள் வடோதராவில் உள்ள ஃபதேகுஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.