மறுபடியும் “உக்கிரமானார்” விஜயகாந்த்:  பாதுகாவலர் முதுகில் பளார்!

1

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில்  தனது பாதுகாவலரை தாக்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த்,  பிரசாரத்தை முடித்துக் கொண்டு தனது காரை நோக்கி நடந்தார்.  அப்போது தொண்டர்கள் அவரை நெருங்கி வந்து பேசவும், கைகுலுக்கவும் முயன்றனர்.    இதை பாதுகாவலர்கள் தடுத்தபடியே விஜயகாந்தை பாதுகாப்பாக அழைத்துவந்தனர். இந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த்,  தொண்டர்களை தடுத்துக்கொண்டிருந்த பாதுகாவலர் முதுகில் பளார் என்று அடித்தார். அந்த பாதுகாவலர், தொண்டர்களை தடுப்பதில் கவனமாக இருந்ததால் விஜயகாந்த் அடித்ததை கவனிக்கவில்லை.

விஜயகாந்தின் “உக்கிரம்” எப்போது முடிவுக்கு வருமோ?