டில்லி

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 200% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

.

இந்திய நாடு பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் பல சலுகைகள் அளித்து வந்தது. பாகிஸ்தான் நாட்டுக்கு வர்த்தகம் செய்ய மிகவும் ஏற்ற நாடு என்னும் அந்தஸ்தை இந்தியா அளித்து இருந்தது. அதனால் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி உள்ளிட்டவைகள் மிகவும் குறைவாக விதிக்கப்பட்டிருந்தன.

நேற்று முன் தினம் பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உலகெங்கும் உள்ள தலைவர்கள் பாகிஸ்தானுக்கு கடும்  கண்டனம் தெரிவித்தனர். .

இந்த தாக்குதலின் விளைவாக இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அளித்து வந்த அனைத்து வர்த்தக சலுகைகளையும் ரத்து செய்தது. மேலும் அந்நாட்டுக்கு அளித்திருந்த வர்த்தகம் செய்ய மிகவும் ஏற்ற நாடு என்னும் அந்தஸ்தையும் நீக்கியது.

எனவே தற்போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சுங்க வரி 200% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.