டாஸ்மாக் விற்பனையாளருக்குக் கரகோஷ வரவேற்பு

--

திருப்போரூர்

திருப்போரூரில் இன்று டாஸ்மாக் கடையைத் திறக்க வந்த விற்பனையாளருக்கு வாடிக்கையாளர்கள் கரகோஷ வரவேற்பு அளித்தனர்.

கொரோனா பாதிப்பையொட்டி தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆயினும் கொரோன பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஒரு சில மாநிலங்களில் வாடிக்கையாளர்களை மலர் தூவி கடைக்காரர்கள் வரவேற்ற காட்சியை நாம் கண்டோம்.

இன்று முதல் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதையொட்டி மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று மது வகைகளை வாங்கிச் செல்கின்றனர்.

திருப்போரூரில் இன்று காலை வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் விற்பனையாளரை கை தட்டி வரவேற்றுள்ளனர்.

You may have missed