கியூடிஸ் லெக்சியா குழந்தைகள்

கியூடிஸ் லெக்சியா ( மற்றப் பெயர்கள் டெர்மடொலிசிஸ், எலஸ்டோலிசிஸ்) ஒரு வகையான திசுக்கள் சிதைவு நோய். இதன்  வெளிவிளைவாக தோல்கள் சுருங்கி மடிப்பு மடிப்பாய்க் காணப்படும். ஆனால், உடலின் உள்ளே இதயம், கல்லீரல், கிட்னி, நரம்பு மண்டலம் போன்றவை கடுமையாக பாதிக்கப் படும்.

 

 

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் வசிக்கும் சத்ருகன் ரஜக்( வயது 40) ரிங்கி தேவி ஆகியோரின் குழந்தைகள்  இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவரது முதல் பெண் குழந்தை அஞ்சலி குமாரி (வயது 7 ) மற்றும்  இளைய மகன் கேசவ் குமார் (1.5 வயது)  இருவரும் இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டு உடலில் உள்ள தோல்கள் சுருங்கி முகம் வீங்கி  மிகவும் வயதானவர்கள் போல் காட்சி அளிக்கிறார்கள்.மேலும் இந்த குழந்தைகள் முழங்கால் வலியாலும் அவதிப்படுகிறார்கள்.
cutis anjalikumari 1

இவர்களது தோற்றம் மற்ற குழந்தைகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் இவர்களை உள்ளாக்கியுள்ளது. இதனால் இவர்கள் மிகுந்த சிரமத்த்ற்கு ஆளாகின்றனர்.

cutis keshav kumar

cutis 2

இது குறித்து அஞ்சலி கூறும் போது எங்களையும் சாதாரண குழந்தைகள் போல் நடத்த வேண்டும்.மற்ற குழந்தைகள் போல் நானும் அழகாக இருக்க விரும்புகிறேன் என கூறினார். இந்த குழந்தைகளை பள்ளியில்  பாட்டி , ஓல்டு லேடி,   குரங்கு என அழைத்து கேலி செய்வதாக அஞ்சலி கூறினார்.

 

இந்த குழந்தைகள் வினோத வகை முதுமை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதற்கு குடிஸ் லக்சா(Cutis Laxa) டாக்டர்கள் இந்த நோயை குணபடுத்தமுடியாது என கூறி விட்டனர். இது போல் 11 வயதில் உள்ள மற்றொரு குழந்தை சாதாரண குழந்தைபோல் உள்ளது.

 

இந்தக் குழந்தைகள் தற்பொழுது உடல் ரீதியாக சராசரியாய் இருந்தாலும், இவர்களின் குறைந்த எதிர்ப்புச் சக்தியின் காரணமாக இவர்களைப்  பலப் பிணிகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்தக் குழந்தைகளின் ஆயுட்காலம் 13 முதல் 15 வயது வரைதான் என்கின்றனர்  மருத்துவர்கள். இந்தியாவில் இந்த வியாதியை குணப் படுத்த வாய்ப்பில்லை  என்றும் மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

cutis 1benjamin button
பெஞ்சமின் பட்டன் எனும் திரைப் படத்தில் கிழவானாய் பிறந்து நாளாகக் நாளாக வயதுக் குறையும் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிராட் பிட் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகி, ஒரு முதியோர் இல்லத்தில் நாயகனைச் சந்திப்பார்.. இவர் வளர வளர.. கதாநாயகன் கிழவனாய் இருந்து குமரனாய் மாறுவார்.

 

இங்கிலாந்துப் பத்திரிக்கை ஒன்று  “பெஞ்சமின் பட்டன் குழ்ந்தைகள் ” எனத் தலைப்பிட்டு இந்தக் குழந்தைகள் குறித்து கட்டுரைச் செய்தி வெளியிட்டுள்ளது. பலப் பத்திரிக்கைகளும் இது குறித்து செய்தி வெளியிட்டாலும், அவர்களது எதிர்காலம் குறித்த கேள்விக்கு எந்தத் தீர்வையும் முன்வைக்க முடியவில்லை என்பது வருந்தக் தக்கது.

 

You may have missed