நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் சி.வி. சண்முகம் (ஜெயக்குமார் அருகில்)

நேற்று தமிழக அமைச்சர்கள் சிலர்  அமைச்சர் தங்கமணி வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் அருகில் இருந்த சி.வி. சண்முகம் அவ்வப்போது குறுக்கிட்டு பதில் அளித்தார். ஜெயக்குமார் கையமர்த்தியும் அவர் அமைதியாகவில்லை.

அப்போது  சிவி சண்முகம், “பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ்  தெரித்துள்ளார். அதை வரவேற்று நாங்கள் ஆலோசனை நடத்தினோம். எங்கள் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பெங்களூரு சென்றுள்ளார்” என்றார்.

அப்போது ஒரு செய்தியாளர், “ தினகரன் பெங்களுருவில் தான் இருக்கிறாரா” என்று கேட்டார்.

உடனே ஆத்திரமான சண்முகம், “ நீங்கதானை செய்தி போட்டீங்க” என்று ஆத்திரமாக கேட்டார். மேலும், “நீங்க என்ன சி.பி.ஐ.யா? நீங்க என்ன சி.பி.ஐயா” என்று மீண்டும் மீண்டும் அந்த செய்தியாளரைப் பார்த்து கேட்டுக்கொண்டே இருந்தார்.

கடந்த பிப்ரவரி மாத சந்திப்பில் சி.வி. சண்முகம்

அமைச்சர் ஜெயக்குமார் கையமர்த்தியும் சண்முகம் அமைதியாகவில்லை.

“இரவில் செய்தியாளர் சந்திப்பு என்றாலே அமைச்சர் சி.வி. சண்முகம் டென்ஷன் ஆகிவிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இதையடுத்து இரவு நேரத்தில் திடீரென சசிகலா தரப்பினர் செய்தியாளர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

கூட்டத்துக்கு  சிவி சண்முகமும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர், தள்ளாடியபடி, “ஓபன்னீர் செல்வம் ஒரு கருங்காலி” என்று குழறிய குரலில் கண்கள் சிவக்க பேசினார். அப்போதே அவரது நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளானது.   தொலைக்காட்சி நேரலையில் அவரது பேச்சைக் கண்ட மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். நேற்று மீண்டும் அதே போல நடந்துகொண்டிருக்கிறார்” என்கிறார்கள் செய்தியாளர்கள்.