புதுடெல்லி: மொத்தம் 79 ஊழல் அதிகாரிகளின் மீது விசாரணை நடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியைக் கோரி, 4 மாதங்களாக காத்திருக்கிறது மத்திய விஜிலன்ஸ் கமிஷன். இதில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் அடக்கம்.

இந்த அதிகாரிகள் தொடர்புடைய மொத்தம் 41 வழக்குகளில், இவர்களின் மீது விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

மொத்த வழக்குகளில், அதிகபட்சமாக 9 வழக்குகள் பணியாளர் நலத்துறை சார்ந்தது. அடுத்ததாக, 8 வழக்குகள் உத்திரப்பிரதேச அரசு தொடர்புடையது. இவைதவிர, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, கார்பரேஷன் வங்கி மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகள் தொடர்புடைய அதிகாரிகள் மீதான விசாரணைகளும் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

மேலும், பாதுகாப்பு அமைச்சகம், யூனியன் பிரதேசங்கள், உணவு மற்றும் விநியோக அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், நகர்ப்புற மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல அமைச்சகங்கள் தொடர்புடைய அதிகாரிகளின் மீதும் விசாரணைகள் காத்திருக்கின்றன.

– மதுரை மாயாண்டி