டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு,  புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் கட்சியின் பொதுச்செயலாளர்  கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேர்தல், கட்சித் தலைவர் தேர்தல்  மட்டுமின்றி, வேளாண் சட்டங்கள்,   விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், தமிழகம் உள்பட 5  மாநில சட்டமன்ற தேர்தல் விவகாரம்  உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும், கட்சியின் தலைவர் பதவி தொடர்பாகவும் முக்கிய  முக்கிய ஆலோசனை  நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

காணொலி மூலம் நடத்தப்பட்ட இந்த  கூட்டத்தில் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உள்ள நிர்வாகிகளான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மற்றும் கட்சித் தலைவருக்கான தேர்தல்  ஜூன் மாதம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும்,  ஆனால், தேர்தல் தேதி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை, விரைவில் இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.