உலககோப்பை கிரிக்கெட்2019: வில்லியம்சன் ஆட்டத்தில் நியூசி அசத்தல் வெற்றி!

லண்டன்:

லக கோப்பை கிரிக்கெட்  தொடரில் நேற்று இரவு நடை பற்ற நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை  வீழ்த்தி நியூசிலாந்து 4-வது வெற்றியை பெற்றது. தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி  அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது.


12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் கடந்த மாதம் 30ந்தேதி முதல்  பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

25வது லீக் போட்டி நேற்று 2 பர்மிங்காமில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்றது.  கோதாவில் குதித்தன. ஆடுகளம் ஈரமாக இருந்ததால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. இதன் காரணமாக ஓவர் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற  நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். அதன் காரணமாக   தென்ஆப்பிரிக்கா மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  குயின்டான் டி காக் ஹசிம் அம்லா ஜோடி களமிறங்கயிது.    குயின்டான் டிக்காக் 4 ரன்னில் வெளியேற  கேப்டன் பிளிஸ்சிஸ் களமிறங்கினார்.  ஹசிம் அம்லா 25 ரன் எடுத்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை (176 இன்னிங்ஸ்) கடந்தார்.

இந்த மைல்கல்லை விராட் கோலிக்கு அடுத்து வேகமாக எட்டியவர் என்ற சிறப்போடு தொடர்ந்து நிதானமாக ஆடி வந்தார். ஸ்கோர் 59 ரன்களாக உயர்ந்த போது பிளிஸ்சிஸ் (23 ரன், 35 பந்து, 4 பவுண்டரி) பெர்குசனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். 25.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது.

மறுமுனையில் அரைசதம் எட்டிய அம்லா 55 ரன்களில் (83 பந்து, 4 பவுண்டரி) சான்ட்னெரின் சுழலில் சிக்கினார்.  குறிப்பாக வான்டெர் துஸ்சென் 64 பந்துகளில் 67 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சற்று சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டார்.

இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. கடைசி 8 ஓவர்களில் மட்டும் 68 ரன்கள் திரட்டினர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 242 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறிய நிலையில் பின்னர் உஷாரானது.  காலின் முன்ரோ 9 ரன்னிலும், மார்ட்டின் கப்தில் 35 ரன்னிலும், ராஸ் டெய்லர், டாம் லாதம் தலா ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 23 ரன்னிலும் பெவிலியன்  திரும்பியது இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும்  கேப்டன் கேன் வில்லியம்சன் அசராமல் நின்று ஆடி, ரன்களை குவித்து வந்தார். தென்னாப்பிரிக்கா பவுலர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். வில்லியம்சன் உடன் கம்பெனி கொடுத்து ஆடிய  . கிரான்ட்ஹோம் 60 ரன்னில் (5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஒரு ஓவரில்  நியூசிலாந்து அணி வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. ரசிகர்களும் ஆட்டத்தை விறுவிறுப்பாக கவனித்து வந்தனர்.

கடைசி ஓவரை தென்னாப்பிரிக்கா பவுலர் பெலக்வாயோ வீசினார். இதில் முதல் பந்தில் சான்ட்னெர் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் அதை சிக்சருக்கு தூக்கியடித்து தனது 12-வது சதத்தை எட்டினார்.  அடுத்த பந்தையும் வில்லியம்சன் பவுண்டரிக்கு தூக்க இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.  வில்லியம்சன் 106 ரன்களுடனும் (138 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), சான்ட்னெர் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தார்.

4-வது வெற்றியை பெற்ற நியூசிலாந்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.