காமன்வெல்த்2018: இந்திய வீராங்கனை மேரிக்கோம் தங்கம் வென்றார்

கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் காரணமாக இந்தியாவின் தங்க வேட்டை தொடர்ந்து வருகிறது. இந்தியா இதுவரை 18 தங்கம் வென்றுள்ளது.

இன்று 10வது நாளாக காமன்வெல்த்  போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வெள்றுள்ளார்.

வடஅயர்லாந்து வீராங்கனையான  கிறிஸ்டினா ஓஹாராவை வீழ்த்தி மேரி கோம் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில்,  35வயதான மேரிகோம் குத்துச்சண்டை போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இதுவரை 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் பெற்று, மொத்தம் 43 பதக்கத்துடன் 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.