காமன்வெல்த் 2018: பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டில்லி:

ஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட வீரர் வீராங்கனைகள் 66 பதங்கங்களை பெற்று நாடு திரும்பினர். அவர்களுக்கு டில்லி விமான  நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடைபெற்று முடிந்த  21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி  நடந்து முடிந்தது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்றது. இந்தியாவும் வீரர், வீராங்கனைகளை களமிறக்கியது. அனைத்துப் பிரிவுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர்.

இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்துடன் வீடு திரும்பிய சுஷிஸ்குமார், மேரிகாம், மணிகா பத்ராவுக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.