விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு….!

முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். ‘800’ என்னும் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என சினிமா பிரபலங்களும், தமிழக அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இத்தகைய எதிர்ப்புகளை மீறி தன்னை பற்றிய வாழ்வியல் படத்தில் நடிக்க வேண்டாம் என முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு இணங்க, தான் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என விஜய் சேதுபதி அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்து ஒரு நபர் கொச்சையான வார்த்தைகளால் பதிவிட்டிருந்தார். இதனால் அந்த நபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது. பலரும் அந்த ட்வீட்டுக்குக் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்தப் பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. பலரும் அந்நபரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.