170 மில்லியன் டாலர் வங்கிப் பணத்தை ஆன்லைன் மூலம் அபேஸ் செய்த ஹேக்கர்கள்!!

Cyberthieves Nearly Stole $170 Million From Union Bank of India

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கணக்கில் இருந்து ஆன்லைனில் மால்வேர் மூலமாக சுமார் 170 மில்லியன் டாலர் மதிப்புள்ள ரூபாயை ஹேக்கர்கள் அபேஷ் செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

வங்கியின் ஊழியர் காலையில் அலுவலகத்திற்கு சென்றதும், அலுவலகம் தொடர்பான மின்னஞ்சலைத் திறந்தால், அதில் ரிசர்வ் வங்கியி்ல இருந்து வந்ததது போல் ஒரு மின்னஞ்சல் வந்திருக்குமாம். அதை கிளிக் செய்தால், அதன் மூலம் ஹேக்கர்கள் ‘வங்கிகளுக்கு இடையேயான சர்வதேச தொலைத்தொடர்பு’ (ஸ்விஃப்ட்) (Worldwide Interbank Financial Telecommunication -SWIFT) அமைப்புக்கான சம்மந்தப்பட்ட வங்கியின் முக்கியமான கோடு எண்களைத் திருடி, அதன் மூலம் கணக்குப் பரிமாற்றம் செய்து பணத்தை திருடி விடுகிறார்களாம். நியூயார்க்கில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு இந்தப் பணம் மாற்றப்பட்டு, அங்கிருந்து குறிப்பிட்ட நபர்கள் எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை இந்த மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. இதனையடுத்து, யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம், இந்தப் பணப்பரிமாற்றத்தை தடுத்து நிறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இதே போல பங்களாதேஷ் 81 மில்லியன் டாலர் பணம் ஆன்லைன் ஹேக்கர்களால் திருடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.