கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.

மணிக்கு 120-150 மைல் வேகத்தில் அடித்த காற்றால் மாநிலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

அம்பன் புயலால் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை சுமார் 12 வரை உயிர் இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொரோனா பாதிப்பை விட அம்பன் புயல் பாதிப்பு அதிக அளவில் உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியலை மறந்து மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து மக்களைக் காக்க பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.