வங்கக்கடலில் புயல் சின்னம்: வடதமிழகத்தில் மழை!

ங்கக்கடல் புயல் மையம் வடதமிழகம் கனமழை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு சென்னை

வங்கக் கடலில் நிலவி வரும்  புயல் சின்னத்தால் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலுக்குப் பிறகு தென் மற்றும் மத்திய தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் வட மாவட்டங்களில் வறண்டவானிலையே காணப்பட்டது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

“தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம்

மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே ஆயிரத்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறி வரும் டிசம்பர் 17ஆம் தேதி ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும்.

இதன் எதிரொலியாக நாளை முதல்  இரு நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஆகவே மீனவர்கள் 15,16ஆம் தேதிகளில் வங்கக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.