கஜா புயல் கோரதாண்டவத்தின் பாதிப்புகள் இதோ…

கடந்த ஒருவாரமாக தமிழகத்தையே ஆட்டிவைத்த கஜா புயல் இன்று வேதாரண்யம் – நாகை இடையே கரையை கடந்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகின்றது.

gaja

இந்நிலையில், கஜா புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் சேதங்களை இங்கு காண்போம்…

* கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அமைச்சர்கள் இன்று பார்வையிடுகின்றனர்

* கனமழை காரணமாக வைகை ஆற்றில் இருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படு வருகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

* பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பநாடு, பேராவூரணி, மன்னார்குடி பகுதிகள் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன; மின்சாரம், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

* கஜா புயல் காரணமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அதிகாரிகளின் உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதி மீனவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

* கஜா புயல் பாதிப்புகளால் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

* தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து, முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்; தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

gaja

* கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்

* கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை வழக்கம்போல் இருக்கும்; கஜா புயலால் 9 விரைவு ரயில்கள், 14 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தன; திருச்சி, மதுரை ரயில் கோட்டங்கள் கஜா புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன – பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா

* திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் உபரிநீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

* ‘கஜா’ புயல் தாக்கியதால், ராமேஸ்வரத்தில் இருந்து இயக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராமநாதபுரத்தில் இருந்து இயக்கம்

* கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவ.23ம் தேதிக்கு ஒத்திவைப்பு – தொழில்நுட்பக் கல்வி இயக்கம்

* கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் நாளை நடக்கவிருந்த துறைத்தேர்வுகள், இணைப்பு கல்லூரிகளுக்கான பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலைக்கழகம்

* புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோயை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, இயற்கை சீற்றங்கள் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என யாராலும் கணிக்க முடியாது – முதல்வர் பழனிசாமி

gaja

* காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

* அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது – முதல்வர் பழனிசாமி

* புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் மின்விநியோகம் விரைவாக அளிக்க நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி

* படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி

* கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என்று அரசு ஏற்கனவே திட்டமிட்டு பணியாற்றியது, புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிப்பார்கள் – முதல்வர் பழனிசாமி

* கஜா புயல் வெள்ள நிவாரண மீட்பு பணிகளுக்கு சேலம் மாவட்ட மின்வாரியத்தின் மூலம் 275பேர் நாகை, தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் – ஆட்சியர் ரோஹிணி

* கஜா புயலால் சேதமடைந்த நாகை ரயில்நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

* கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பேர் ஈடுபட்டுள்ளனர். நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் விநியோகத்தை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் – மின்வாரியம்

* புயல் பாதித்த மக்களை அவர்கள் உள்ள இடத்திற்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கவும், தொற்று நோயை தடுக்கவும் நடமாடும் 216 மருத்துவ குழுவை தமிழக அரசு நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

pudukot

* கஜா புயல் முன்னெச்செரிக்கையுடன் கையாண்டதற்கும், மீட்பு பணியில் ஈடுபட்டதற்கு தமிழக அரசை கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

* வேதாரண்யத்தில் புயல் காரணமாக மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 26 ஆக உயர்ந்துள்ளது.

* திருவாரரில் 28 ஆயிரம் மரங்கள் வேருடப் சாய்ந்தன. மொத்தமுள்ள 202 முகாம்களில் சுமார் 1.11 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* கஜா புயல் காரணமாக 173 இயந்திர படகுகள் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து 53 மீனவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவடங்களில் உள்ள 333 மீனவ கிராமங்கள் படகுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

* கஜா புயல் மீட்பு பணிக்காக 450 ஆம்புலன்ஸ் தயார்படுத்தப்பட்டதாகவும், 6 மாவட்டங்களிலிருந்து அவசர கால அழைப்புக்காக குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு 800 அழைப்புகள் வந்தன. அதில் 600 அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் அனுப்பியதாக கட்டுப்பாட்டு அறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

* கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு
பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

* பேரிடர் மேலாண்மை வாரியத்தை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும், எண்ணிலடங்கா உயிர்களை காக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்பட்டு வருகிறோம் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

* திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த சுங்கச்சாவடி

* தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளைபுரி பஞ்சாயத்து அழகாபுரி கிராமத்தில் உள்ள ஒரு வீடு பலத்த காற்றால் சின்னாபின்னமானது.

* கஜா புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்தார்

* கஜா புயல் பாதிப்பால் பலியானவர்களுக்கு ரூ. 10 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக அளிக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

* புயலின் சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை பெற்ற பின் மத்திய அரசிடம் நிதி கோரப்படும் – முதல்வர்

* வேளாங்கன்னி மாதா கோயில் புயல் காரணமாக சேதமடைந்துள்ளது.

* நாகையில் 5000 மின் கம்பங்கள், திருவாரூரில் 4000 மின் கம்பங்கள், தஞ்சையில் 3000 மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரிசெய்யும் பணியை போர்கால அடிப்படையில் செய்யப்படுவதாக மின்சார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* தமிழகளவில் 438 முகாம்களில், தற்போது வரை 82 ஆயிரம்பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-