சென்னை:

சென்னையில் நிவர் புயல் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி சென்று விட்டது. சென்னையில் 36 சதவிகிதம் மழை பெய்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், வங்காள விரிகுடாவில் அடுத்தடுத்து அதிக மழை பெய்யும் என்றும், இதனால், சென்னை நகர் மற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், தமிழக கடலோரப் பகுதிகளில் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், புயல் உருவாகும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இதுமட்டுமின்றி வரும் டிசம்பர் 11ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்காள விரிகுடாவின் தெற்கு வளைகுடா பகுதியில் இன்று (நவம்பர் 29ஆம் தேதி) மழை பெய்யும். இது தென் தமிகத்தை நோக்கி கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் தெரிவிக்கையில், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

இருந்தபோதிலும், இந்த காலநிலை மாற்றம் தொடர்ந்து இருக்கும் என்றும், இதனால் டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் வேகம் குறையும் ஏனென்றால், நிவர் புயல் பாதிப்புக் காரணாமாக சென்னையின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள குளிர்ச்சியான காலநிலையேயாகும். மேலும் கிழக்கு நோக்கி நகரும் மேகக்கூட்டம், மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் புயல் பாதிப்பு, கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத காலநிலைகளுக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் வேகத்தை குறைத்து விடலாம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

பொதுவாக, ஒரு காலநிலை மாற்ற நிகழ்ந்த பின்னர், சற்று வறண்ட காலநிலையே நிலவும். இந்த நிலையில், தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை ஆய்வாளர் பிளாக்கர் பிரதீப் ஜான் தெரிவிக்கையில், சர்வதேச காலநிலையை பார்க்கும் போது, டிசம்பர் மாதத்தில் அதாவது டிசம்பர் மாதம் 8 முதல் 11 ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழையால் சென்னையின் நுங்கபாக்கத்தில் 839 mm மழை பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த காலநிலையில் 857mm மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இன்னும் இரண்டு காலநிலை மாற்றங்கள் சென்னைக்கு மழையை கொண்டு வர உள்ளன. இதுமட்டுமின்றி இந்த காலநிலை மாற்றங்களால், சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், பருவமழை காலம் நீளமாக மாறும் என்பதில் ஐயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.