கஜா புயல் தமிழகத்தை நோக்கி நகர்கிறது

 

சென்னை

ங்கக்டலில் உருவாகி உள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி மெல்ல நகர தொடங்கி உள்ளது

கடந்த 5 ஆம் தேதி வங்ககடலின் தாய்லாந்து வளைகுடா மற்றும் மலையக தீபகற்ப பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவனது. தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை பெற்றது

நேற்று இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதே இடத்தில் நிலை கொண்டது. அதன் பிறகு நேற்று இரவு மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்து தாழ்வு மண்டலமாக மாறியது. அத்துடன் மெல்ல நகர்ந்து புயலாக உருவெடுத்தது.

இந்த புயலுக்கு கஜா புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் தமிழகத்தை நோக்கி மெல்ல நகர்ந்துக் கொண்டு உள்ளது. இதனால் நாளை மறுநாள் 13ஆம் தேதி அன்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று தூத்துக்குடி , நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.