’’முரசு’’- புயலுக்கு முதன் முறையாகத்  தமிழில் பெயர்..

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றி வட்டமடிக்கும், புயல்களைச் செல்லமாகப் பெயர் சூட்டி அழைத்து வருகிறோம்.

அரபிக்கடலை உள்ளடக்கிய வடக்கு இந்து மகா சமுத்திரத்தில் உருவாகும் இந்த புயலுக்கு, இது வரை தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது இல்லை.

முதன் முறையாகப் புயலுக்கு  ‘முரசு’’ என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்படுகிறது.

புயல் உருவாகும் இந்த  பிராந்தியத்தில் உள்ள இந்தியா உள்ளிட்ட  13 உறுப்பு  நாடுகள் புயலுக்கு என்ன பெயர் சூட்டலாம் எனப் பரிந்துரைக்கும்.

ஒவ்வொரு நாடும் தலா 13 பெயர்களைச் சிபாரிசு செய்யலாம்.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையங்களிடம் கருத்துக் கேட்டு, உலக வானிலை ஆய்வு அமைப்புக்கு, இந்தியா 13 பெயர்களை  அனுப்பி வைக்கும்.

அந்த அமைப்பில் உள்ள பேனல்,(குழு)  புதிய புயலின் பெயரை முடிவு செய்யும்.

இந்த வகையில் 13 நாடுகள், மொத்தம் 169 பெயர்களை அனுப்பி இருந்தன.

அந்த பெயர்களில் இருந்து, ‘முரசு’ என்ற பெயரையும் பேனல் தேர்வு செய்துள்ளது.

எந்த புயலுக்கு இந்த பெயர் சூட்டப்படுகிறது என்பது தெரியவில்லை.

இஷ்டம் போல் நாம் விரும்பிய படி பெயர்களைப் பரிந்துரைக்க முடியாது.

 புயலுக்கும் , பெயருக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்க வேண்டும்.

கடலில் சீற்றம் இருந்தாலோ,மீனவர்களுக்கு ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டுமென்றாலோ முரசு கொட்டி சொல்வது வழக்கம் என்பதால், இந்த பெயரை இந்தியா சிபாரிசு செய்ய , அதனை ஏற்றுக்கொண்டது, உலக வானிலை ஆய்வு மைய பேனல்.

– ஏழுமலை வெங்கடேசன்